சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருளில் மூழ்கியது ஜப்பான்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருளில் மூழ்கியது ஜப்பான்

ஜப்பானின் ஃபுகுஷியா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மின்சார சேவை நின்று போனதால் டோக்கியோவில் 20 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் 90 பேர் காயமடைந்துள்ளனர். டோக்கியோவில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மின்சார சேவை நின்று போனதால் 20 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர். நிலநடுக்கம் காரணமாக மியாகி அருகே ஷிரோஷியில் சென்று கொண்டிருந்த புல்லட் ரயில் தடம் புரண்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in