ஒரு ஆண்டில் 300 பேருடன் தகாத உறவு... வேலையை இழந்த இளம்பெண்!

அன்னி நைட்
அன்னி நைட்

ஒரே ஆண்டில் சுமார் 300 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இளம்பெண். இதுகுறித்து தெரிந்ததும் அந்தப் பெண்ணை கார்ப்பரேட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக மிகவும் ஆக்டிவாக இருப்பவர்  ஆபாசப் பட நடிகை அன்னி நைட் (26). இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்  ஒரே ஆண்டில் 300க்கும் மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு கொண்டதாக வெளிப்படையாக  கூறியது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து  தெரியவந்ததும் அவர் பணியாற்றி வந்த கார்ப்பரேட் நிறுவனம் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்தார் அன்னி நைட்.

அதன்பிறகு பிரபல டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள அன்னி நைட்,  குறிப்பிட்ட ஆபாச இணையதளத்தில் டாப் 0.4 சதவீதத்தில் இருக்கிறாராம். தனது இந்த ஆபாசப் பட வாழ்க்கையால் நிச்சயம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடங்கள் வரும் என்று அறிந்து இருந்தாலும் கூட இதற்காக வேலை போகும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

"முதலில் இந்த கணக்கைத் தொடங்கிய போது எனக்கு சில கவலை இருந்தது. ஆன்லைனில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னைத் தினசரி வாழ்வில் சந்திப்போர் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கவே செய்தது. இதன் காரணமாகவே ஆபாசப் படங்களில் நடிப்பதை எனது வேலை உட்பட அன்றாட வாழ்க்கையில் இருந்து முடிந்தவரை விலக்கி வைத்திருந்தேன். ஆனாலும், அதே காரணத்தால் இப்போது நான் வேலையிழந்துள்ளேன்.

சமீபத்தில் புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அங்கே பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அப்போது ஒருநாள் உடல்நலக்குறைவால் சீக்கிரமாக வீடு திரும்பினேன். வீட்டுக்கு வரும் முன்பே எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதில் எனது ஆபாச தள கணக்கு குறித்தும் ஸ்கிரீன் ஷாட்களை இணைத்திருந்தார்கள். இதன் காரணமாக என்னை வேலையை விட்டு நீக்குவதாக மெயிலில் கூறியிருந்தனர்.

உண்மையில் அந்த வேலை மீது எனக்குப் பெரியளவில் ஈடுபாடே இல்லை. அந்த நிறுவனத்தின் பாலிசிக்களே கடுப்பாகத்தான் இருந்தது. ஆனாலும், திடீரென என்னை வேலையைவிட்டு நீக்கியது கஷ்டமாகத்தான் இருந்தது" என்று அவர் கூறினார்.

கடந்த செப். 2020ல் ஆபாச இணையத்தில் கணக்கைத் தொடங்கிய அன்னி நைட்  அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை புதிதாக வீடு வாங்குவதற்காக  சேமித்துக் கொண்டு இருந்தாராம்.  இப்போது அதே  ஆபாச தளம் காரணமாக அவர் வேலையை இழந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in