உலக நாடுகளுக்கு போப்பாண்டவர் எச்சரிக்கை... ‘காலநிலை மாற்றத்தால் நெருங்கும் பிரேக்கிங் பாயிண்ட்’!

போப்பாண்டவர் - காலநிலை மாற்றம்
போப்பாண்டவர் - காலநிலை மாற்றம்Jules Gomes

காலநிலை மாற்றம் தொடர்பாக போப்பண்டவர் விடுத்திருக்கும் புதிய எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அதன் பொருட்டான உச்சி மாநாடுகள், பிரகடனங்கள், புதிய திட்டங்கள் என சகலமும் நிதர்சனத்தில் பலன் அளிப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணம் காலநிலை மாற்றத்துக்கு எதிரான வளர்ந்த நாடுகளின் போலி கூக்குரலாகும்.

போப்பாண்டவர் - காலநிலை மாற்றம்
போப்பாண்டவர் - காலநிலை மாற்றம்

வளர்ந்த நாடுகளே கார்பன் உமிழ்வுக்கு காரணமாகி வருகின்றன. ஆனால் அவை வளரும் நாடுகள் மற்றும் ஏழ்மையில் தவிக்கும் நாடுகள் மீது பழியைப் போடுகின்றன. மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அதற்கான தேவைகளே காலநிலை மாற்றத்துக்கான முக்கிய காரணம் என அவை வாதிடுகின்றன.

போப்பாண்டவர், போப் பிரான்சிஸ் தனது காலநிலை மாற்றம் தொடர்பான தற்போதைய அறைகூவலில் வளர்ந்த நாடுகளையே குற்றம் சாட்டியிருக்கிறார். ‘வளர்ந்த நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகளின் பொறுப்பற்ற வாழ்க்கை முறைகளே காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாகி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஒரு நபர் வெளியிடும் உமிழ்வு என்பது சீனாவில் வசிப்பவர்களை விட இரு மடங்காகவும், ஏழ்மை நாடுகளில் இருப்பவர்களைவிட 7 மடங்காகவும் இருக்கிறது.

போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய முடிவெடுக்கும் அமைப்புகள் பயனற்றுப் போய்வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்கள் மீளமுடியாத பட்டியலில் சேர்ந்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் சரியும் உலகம் அதன் பிரேக்கிங் பாயிண்ட் என்பதை நெருங்கி வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது நடவடிக்கைகள் பல பத்தாண்டுகளுக்கு பின்தங்கி இருக்கின்றன.

காலநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளைப் பொறுத்தளவில் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையாக மட்டுமே அமைந்து விடுகிறது. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிலிருந்து தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு நாம் இன்னும் வேகமாக மாறியாக வேண்டும்”

இவ்வாறு போப்பாண்டவர் வலியுறுத்தி இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in