போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிடாதீங்க!

ரணில் விக்கிரமசிங்கே கோபம்
போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிடாதீங்க!

இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தைக் கெடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளளார்.

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள இளைஞர்கள் குழுவுடன் நேற்று அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில்," நாட்டில் உள்ள இளைஞர்களும், சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது அரசியல் அல்லது வேறு சக்திகளின் கீழ் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தை கெடுக்க வேண்டாம்.

போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதில் இளைஞர்கள் பொறுமையுடனும், அமைதியாகவும் இருக்க வேண்டும் எனவும் அகிம்சை வழியில் போராட வேண்டும்" என்றும் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in