தரையில் கிடந்த தேசியக் கொடி... தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் செயல்!

தரையில் கிடந்த தேசியக் கொடி... தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் செயல்!

தென்னாப்பிரிக்காவில் குழு புகைப்படம் எடுக்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி, தான் நிற்கவேண்டிய இடத்தில் அடையாளமாக தரையில் வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசியக் கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்ட செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய சார்பாக கலந்துகொள்ள சென்றுள்ளார். ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவுடன் புகைப்படம் எடுக்கும் தருணத்தில் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இன்று குழு புகைப்படம் எடுக்கும்போது, தலைவர்கள் நிற்கவேண்டிய இடத்தைக் குறிக்கும் அடையாளமாக, அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகள் தரையில் சிறிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. குழு புகைப்படம் எடுக்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி, உடனே கீழே அவர் நிற்கவேண்டிய இடத்தில் வைத்திருந்த இந்திய தேசிய மூவர்ணக் கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

பிரதமர் மோடியின் செயலைப் பார்த்த பின்னர், ஏற்கனவே தனது நாட்டின் கொடியை கவனிக்காமல் அதை மிதித்தபடி நின்றிருந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும் தங்கள் நாட்டுக் கொடியை கையில் எடுத்துக்கொண்டார். அரங்கில் இருந்த ஒருவர் அவரிடம் வந்த அந்தக் கொடியை வாங்கிச் சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in