நடுவானில் மோதி தரையில் விழுந்து தீப்பிடித்த விமானங்கள்: சாகச நிழ்ச்சியில் 6 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

நடுவானில் மோதி தரையில் விழுந்து தீப்பிடித்த விமானங்கள்: சாகச நிழ்ச்சியில் 6 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

டெக்சாஸில் இரண்டாம் உலகப்போர் விமான சாகச கண்காட்சியில் இரண்டு விமானங்கள் மோதி நடுவானில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர்க்கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. இதனால் அந்த விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் சிறிய விமானத்திற்கும் இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களிலும் உள்ள விமானிகளின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in