அதிர்ச்சி... புயலால் அடித்துச் செல்லப்பட்ட விமானம்; புல்வெளியில் இறங்கியதால் பயணிகள் அலறல்

அதிர்ச்சி... புயலால் அடித்துச் செல்லப்பட்ட விமானம்; புல்வெளியில் இறங்கியதால் பயணிகள் அலறல்

பிரித்தானியாவை புரட்டிப் போட்டுள்ள புயலில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவை 'Babet’ என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் கிரீஸ் தீவுகளில் ஒன்றான கோர்ஃபு தீவிலிருந்து பிரித்தானியாவின் லீட்ஸ் ஃப்ரோப்ட் விமான நிலையத்துக்கு வந்த விமானம் ஒன்று, பலத்த காற்றின் நடுவே தரையிறங்கியுள்ளது. அப்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்ற அந்த விமானம், புல்வெளியில் சென்று நின்றுள்ளது. இதனால் பயணிகள் அலறினர். விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in