பிகாசோவின் படைப்பு ரூ.1160 கோடிக்கு ஏலம் - ஓவியத்தில் இடம்பெற்ற பெண் யார் தெரியுமா?

பிகாசோ ஓவியம்
பிகாசோ ஓவியம்

நவீன ஓவியங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பாப்லோ பிகாசோ வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் ரூ.1,160 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு பெண்ணின் உருவத்தை கொண்ட இந்த ஓவியம் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருப்பது ஆச்சரியங்களை கிளப்பியிருக்கிறது. இந்த ஓவியத்திற்கு ஏன் இவ்வளவு டிமாண்ட் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏல நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஒன்றும் ஏலம் விடப்படது. இந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி பாப்லோ பிக்காசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று சுமார் $140 மில்லியனுக்கு விற்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1160 கோடி ஆகும். விடப்பட்ட ஓவியத்தைப் பற்றி பேசுகையில், அதன் பெயர் 'Woman with a Watch'. இந்த ஓவியத்தில் இருக்கும் பெண் பிரெஞ்சு ஓவியர் மேரி-தெரேஸ் வால்டர்.

குரங்கிலிருந்து மனிதர்கள் பரிணாமம் அடைந்தபோதே ஓவியங்களை வரைய தொடங்கிவிட்டனர். பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து காகித தாள்களிலும், வெள்ளை துணிகளிலும் குடியேறின. ஆனாலும் இதன் வடிவம் மட்டும் மாறவேயில்லை. அப்போதுதான் ஓவியங்களின் உலகுக்குள் பிக்காசோ வருகிறார். அதுவரை இயற்கை காட்சிகள் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்த தாள்களில், பிகாசோ மனிதர்களை வரைய தொடங்குகிறார்.

தான் பார்த்த மனிதர்கள், பெண்கள், கைக்குழந்தைகள், வறுமை என அனைத்தையும் வரைய தொடங்குகிறார். இது பெரும் விவாதமாக ஆகிறது. பலரும் இந்த ஓவியங்கள் குறித்து பேச தொடங்குகின்றனர். இப்படியாக பிகாசோவின் ஓவியங்கள் பிரபலமடைய தொடங்குகின்றன. இவருக்கு காதலும் பிறக்கிறது. காதல் இல்லாத கலைஞன் எங்காவது உண்டா என்ன? மேரி தெரேஸ் வால்டர் எனும் 18 வயது இளம்பெண்ணை இவர் பாரிஸ் அருகே சந்திக்கிறார்.

இதுநாள் வரை இவர் வரைந்த மனித முகங்களை விட மேரியின் முகம் வித்தியாசமாக இருந்தது. ஒருமுறை பார்த்தால் அந்த முகத்தை அப்படியே பதிவு செய்து வைக்கும் இவரது தனித்தன்மை மேரியிடம் மட்டும் தோற்று போனது. பிகாசோவால் இதை புரிந்துக்கொள்வே முடியவில்லை. இந்த முகத்தை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த பெண்ணிடம் இது குறித்து கூறுகிறார். பின்னர் தினமும் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது மேரியின் முகம் அப்படியே பிகாசோவின் மனதில் படிகிறது. நதியில் போட்ட கல்லை போல அது ஆழத்திற்கு சென்றுவிடுகிறது. காதல் மலர்கிறது. ஓவியத்தின் துரிகை மேரியின் முகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த 1932ல் வரையப்பட்ட இந்த 'வுமன் வித் எ வாட்ச்' ஓவியம்தான் தற்போது ரூ.1,160 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஏறத்தாழ 90 ஆண்டுகள் கழித்து ஒரு ஓவியம் இவ்வளவு பெரிய விலைக்கு ஏலத்தில் விற்றிருப்பது ஆச்சரியமான விஷயம்தான். பிற்காலத்தில் பிகாசோ ஓல்கா எனும் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என்பது தனி கதை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த எமிலி பிஷர் லாண்டவ் கலைகள் மீது, குறிப்பாக ஓவியங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்தான் பிகாசோவின் மேற்குறிப்பிட்ட ஓவியத்தை வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்துதான் இது தற்போது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பிகாசோ தான் வாழ்ந்த 78 ஆண்டுகளில் மொத்தம் 13,500க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். இதுதவிர 34,000 illustration எனப்படும் விளக்கப்படங்களையும் வரைந்திருக்கிறார். இவரது மொத்த ஓவியங்களிலும் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றுதான் மேரி தெரேஸ் வால்டரின் ஓவியம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in