ஃபிரிட்ஜிக்குள் 20 மணி நேரமிருந்த சிறுவன்... உயிருடன் மீட்ட வீரர்கள்... தந்தை இறந்த சோகம்

ஃபிரிட்ஜிக்குள் 20 மணி நேரமிருந்த சிறுவன்... உயிருடன் மீட்ட வீரர்கள்... தந்தை இறந்த சோகம்

பிலிப்னைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் 20 மணி நேரம் இருந்த சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர் மீட்பு குழுவினர். சிறுவனின் தந்தை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்னைன்ஸில் அண்மையில் மெகி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் வேவே நகரும் தப்பவில்லை. இந்த பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, ஜி.ஜே.ஷஸ்வன் என்ற 11 வயது சிறுவன் உயிர் பிழைப்பதற்காக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் பதுங்கியுள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குளிர்சாதன பெட்டி ஒன்று சிக்கியுள்ளது. இதனை திறந்து பார்த்தபோது, சிறுவன் உயிருடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கால்கள் உடைந்த நிலையில் இருந்த சிறுவனை மீட்ட மீட்பு குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக சிறுவன் குளிர்சாதன பெட்டிக்குள் இருந்தது தெரியவந்தது.

இதே நேரத்தில், நிலச்சரிவின்போது சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் காணாமல் போனார்கள். இதில் சோகம் என்னவென்றால் நிலச்சரிவில் சிக்கி சிறுவனின் தந்தை இறந்துவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in