பெட்ரோல் லிட்டர் ரூ.331, டீசல் ரூ.329- பரிதவிக்கும் மக்கள்!

 பெட்ரோல்
பெட்ரோல்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு 26 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது.

இதனால் அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை
பெட்ரோல் விற்பனை

ஏற்கெனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்க்கும், டீசல் 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in