செயலிழந்து வரும் உடல் உறுப்புகள்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கவலைக்கிடம்

செயலிழந்து வரும் உடல் உறுப்புகள்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்தவர் பர்வேஸ் முஷரப். 1999-ம் ஆண்டில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக ராணுவ கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார் முஷரப். இதன் பின்னர் 2001-ம் ஆண்டில் அந்நாட்டின் அதிபரானார். 2008-ம் ஆண்டு வரை அதிபராக தொடர்ந்து பதவி வகித்த முஷரப், உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக லண்டனுக்கு அடைக்கலம் புகுந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முஷரப் துபாயில் விசித்து வருகிறார்.

இந்நிலையில், முஷரப் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினர் ட்விட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், "முஷரப் வென்டிலேட்டரில் இல்லை. மூன்று வார காலமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மிக மோசமான நிலையில் உள்ள அவர் மீண்டுவருவது இயலாத ஒன்று. அவரது உறுப்புகள் செயல்படவில்லை. எனவே, அவர் கஷ்டமில்லாது வாழ பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in