இலங்கையில் இரவிலும் வெடித்த மக்கள் போராட்டம்

பதவி விலக கோத்தபய அடம்
இலங்கையில் இரவிலும் வெடித்த மக்கள் போராட்டம்

அதிபர் கோத்தயய ராஜபக்ச பதவி விலகக்கோரி இலங்கையில் விடிய விடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பதவி விலக மாட்டேன் என்று கோத்தபய அடம்பிடித்து வருகிறார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையே நடத்தவே கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி அதிபர் அலுவலகம் முன்பு மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். காவல்துறையினர் மக்களின் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றனர்.

இந்தநிலையில், வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இரவு பகலாக மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு தேனீர், உணவு போன்றவை வழங்கப்பட்டன. ஆங்காங்கே முகாம்கள் அமைத்து போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இரவிலும் நடைபெற்ற போராட்டத்தால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக அறிவித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், ராஜபக்ச அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி எதிர்கட்சிகள் விவாதித்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in