மெக்சிகோவை புரட்டிப்போட்ட ஓடிஸ் சூறாவளி... உணவு, குடிநீருக்காக கடைகளை சூறையாடும் மக்கள்!

மெக்சிகோவை புரட்டிப்போட்ட ஓடிஸ் புயல்
மெக்சிகோவை புரட்டிப்போட்ட ஓடிஸ் புயல்

மெக்சிகோவில் அகாபுல்கோ நகரை சூறாவளி தாக்கிய நிலையில் அங்கு உணவு பொருட்கள் இல்லாததால் பொதுமக்கள் கடைகளில் இருந்து பொருட்களை சூறையாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரை கடந்த வாரம் சூறாவளி ஓடிஸ் தாக்கியது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைத்ததோடு, 27 பேர் உயிரிழந்தனர். இதனிடைய மத்திய அரசு போதிய உதவிகளை செய்யாததால் உணவு மற்றும் குடிநீர் இன்றி அந்நகர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல மில்லியன் டாலர் அளவிற்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்
உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

இதனால் அங்குள்ள கடைகளில் இருந்து உணவுப் பொருட்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர். கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உணவு மற்றும் அடிப்படை தேவைக்கான பொருட்களை மக்கள் எடுத்துச் சென்று வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் வருவதில்லை என குற்றம் சாட்டியுள்ள மக்கள், பணம் இருந்தாலும் பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையே நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உணவு, குடிநீருக்காக கடைகளை சூறையாடும் அவலம்
உணவு, குடிநீருக்காக கடைகளை சூறையாடும் அவலம்

இதனிடையே இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரே மேனுவல், மக்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு உடனடியாக தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் எனவும், மீட்பு பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in