கண்கலங்க வைத்த சோகம்; இஸ்ரேலில் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி மகனை காப்பாற்றிய பெற்றோர்!

கண்கலங்க வைத்த சோகம்; இஸ்ரேலில் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி மகனை காப்பாற்றிய பெற்றோர்!
Updated on
1 min read

இஸ்ரேலில் துப்பாக்கி குண்டுகளை தங்கள் நெஞ்சில் வாங்கி பெற்றோர் மகனை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். வான்வழி தாக்குதல் மட்டும் இல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது ஒரு தம்பதியினர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தங்களை காத்துக்கொள்ள குடும்பத்துடன் ஒரு அறைக்குள் பதுங்கினர். அவர்கள் ஷ்லோமி மத்தியாஸ், அவரது மனைவி டெபோரோ மற்றும் அவர்களின் 16 வயது மகன் ரோத்தம் மத்தியாஸ்.

தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் இவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கும் வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போல் படுத்துக் கொண்டனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து பெற்றோர் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். ஆனாலும், அவர்களின் 16 வயது மகனுக்கு வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்தது.

இதையடுத்து சிறுவன் தெற்கு இஸ்ரேலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in