வடகிழக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல்
வடகிழக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!
கோப்புப் படம்

கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதச் செயல்களுக்கு திட்டம் தீட்டி வந்த பாகிஸ்தான் தீவிரவாதியை, இன்று காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களுக்கு முயன்றுவருகிறது. நம் இந்திய ராணுவம் விழிப்போடு இருந்து இரும்புக்கரம் கொண்டு அதனை அடக்கிவருகிறது. நேற்றுகூட பாகிஸ்தானில் இருந்து குட்டி டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் வந்தது. அதை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதை நோக்கி சுட்டனர். உடனே, பாகிஸ்தானில் இருந்து அதனை ரிமோட் மூலம் இயக்கிய மர்ம்நபர் அதனை மீண்டும் பாகிஸ்தானை நோக்கித் திருப்பிக்கொண்டார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி கடந்த இருவருடங்களாக வடகிழக்கு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்தார். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் இன்று அவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் பகுதி காவல் ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருந்தும் அந்த தீவிரவாதியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.