வரும் ஜனவரி மாதம் மக்களவை தேர்தல்... அதிரடியாய் அறிவித்தது தேர்தல் ஆணையம்!

பாகிஸ்தான் தேர்தல்
பாகிஸ்தான் தேர்தல்

பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் உள்ளார். இந்த நிலையில் , பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மளிகைப்பொருட்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in