‘நிலவின் தென்துருவத்தை இந்தியா எட்டிவிட்டது; பாகிஸ்தானில் 2.62 கோடி குழந்தைகள் பள்ளி செல்ல வழியில்லை’ -பாக். எம்பி ஏக்கம்!

பாகிஸ்தானில் பாடம் படிக்கும் குழந்தைகள்
பாகிஸ்தானில் பாடம் படிக்கும் குழந்தைகள்

விண்வெளி அறிவியலில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும், பாகிஸ்தானில் குழந்தைகளை எட்டியிருக்கும் துயரத்தையும் அந்நாட்டு எம்பி ஒருவர் பகிரங்கமாக ஒப்பிட்டு பேசியிருப்பது இரு தேசங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கே உரிய அரசியல் ஸ்திரமின்மையும், பொருளாதார சரிவும் அதனை அதலபாதாளத்தில் தள்ளி உள்ளது. இவற்றின் மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒப்பீடுகள் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றாக பாகிஸ்தான் குழந்தைகளின் பரிதாபநிலை குறித்து பாகிஸ்தான் எம்பி ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீவிரமான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

சையத் முஸ்தபா கமால்
சையத் முஸ்தபா கமால்

’முட்டாஹிதா குவாமி மூவ்மென்ட் பாகிஸ்தான்’ கட்சியின் எம்பியாக இருக்கும் சையத் முஸ்தபா கமால், கராச்சியில் திறந்தவெளி வாய்க்கால்களில் விழுந்து சாகும் குழந்தைகள் முதல், பாகிஸ்தான் தேசத்து குழந்தைகள் கல்வியறிவு பெற பள்ளிகளுக்கு செல்ல முடியாதது வரை சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளார். சையத் முஸ்தபாவின் ஒப்பீட்டை ஆதரித்தும், விமர்சித்தும் பாகிஸ்தானில் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

”பாகிஸ்தானில் குழந்தைகளின் நிலைமை பரிதபகரமாக மாறிவருகிறது. அதிலும் குறிப்பாக கராச்சியின் நிலை கடும் வேதனை அளிக்கிறது. உலகம் நிலவுக்குச் செல்லும் போது, ​​​​இங்கே பல குழந்தைகள் திறந்த வாய்க்கால்களில் விழுந்து இறக்கின்றன. இந்தியா நிலவில் தரையிறங்கிய சில விநாடிகளில், கராச்சியில் ஒரு குழந்தை ஒரு திறந்த சாக்கடையில் விழுந்து இறந்தது. ஒவ்வொரு மூன்றாவது நாளும் இந்த துயரம் இங்கே தொடர்ந்து வருகிறது” என்று சையத் முஸ்தபா கமால் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியா இப்போது நிலவின் ஆராயப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடு மற்றும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய முதல் 4 நாடுகளில் ஒன்றாகி உள்ளது. இதனையே தனது உரையில் சையத் முஸ்தபா கமால் நினைவு கூர்ந்துள்ளார். ”பாகிஸ்தானில் 26.2 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இந்த எண்ணிக்கை உலகின் 70 நாடுகளின் மக்கள்தொகையை விடவும் அதிகம். படிக்காதவர்கள் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பது, நமது நாட்டின் மிச்சமிருக்கும் பொருளாதார வளர்ச்சியையும் அழியக் காரணமாகிவிடும்" என்றார்.

படிப்புக்கு ஏங்கும் பாகிஸ்தான் குழந்தைகள்
படிப்புக்கு ஏங்கும் பாகிஸ்தான் குழந்தைகள்

”சிந்துவில் மட்டும் 48 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. ஆனால் அவற்றில் 11 ஆயிரம் பள்ளிகள், குழந்தைகள் அணுக வாய்ப்பில்லாத பேய் பள்ளிகளாக உள்ளன. இதனால் அந்த மாகாணத்தில் 70 லட்சம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல இயலவில்லை. யுனிசெஃப் கருத்துப்படி, பாகிஸ்தானில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்று சையத் முஸ்தபா கமால் கவலை தெரிவித்துள்ளார். இவரது நாடாளுமன்ற பேச்சு பாகிஸ்தானில் பெருமளவு விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. குழந்தைகளின் கல்வி குறித்தான விவாதங்கள் மட்டுமன்றி, இந்தியாவுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானை தாழ்த்தியதாக எம்பி சையத் முஸ்தபா மீது குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in