
வலையில் சிக்கிய அரிய ரக மீன்களால், பாகிஸ்தான் மீனவர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
பாகிஸ்தானின் கராச்சி அருகே இப்ராஹிம் ஹைடேரி என்ற மீனவ கிராமத்தில் வசிப்பவர் ஹாஜி பலோச். 2 தினங்களுக்கு முன்னர் இவரது தலைமையிலான மீனவர்கள் அரபிக் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். குறைந்த அவகாசத்தில் கடல் பயணத்தை திட்டமிட்டதால், ஆழ்கடல் பக்கம் செல்லாது கரையோரம் அண்டும் மீன்களை குறிவைத்து வலையை வீசினார்கள்.
வலையில் ஒரு தங்கப் புதையல் சிக்கியிருப்பதை, கரைக்கு திரும்பும் வரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் பிடித்த மீன்களில் ’சோவா’ மீன்களும் இருந்ததைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்கள். உள்ளூர் வழக்கில் தங்க மீன் என்றழைக்கப்படும் சோவா மீனினம், எளிதில் வலையில் சிக்காதது. இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு அரிதாக கரையோரம் வரும் மீன்கள், அதிர்ஷ்டவசமாக மீனவர் வலையில் சிக்குவதுண்டு.
கராச்சி மீன் சந்தையில் ஒரு சோவா மீன் விலை பாகிஸ்தான் கரன்சி மதிப்பில் பல லட்சத்துக்கு போனது. வலையில் சிக்கிய மீன்கள் அனைத்தையும் ஏலம் விட்டபோது, ஹாஜி குழுவினருக்கு 7 கோடி கிடைத்தது. ஏழ்மையான பின்னணி கொண்ட பாகிஸ்தான் மீனவர்கள் இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சோவா மீன் இனம் ஒன்றின் எடை 12 முதல் 20 கிலோ தேறும்; இது சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் வளரும். பாரம்பரிய மருத்துவத்தில் சோவா மீன்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதன் உடலில் கிடைக்கும் உட்பொருட்கள் பலவித பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்துகள் தயார் செய்யப் பயன்படுகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!