பகீர் வீடியோ: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 50க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

வியட்நாம் தீ விபத்து
வியட்நாம் தீ விபத்து

வியட்நாம் தலைநார் ஹனோயில் உள்ள 10 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பற்றி கட்டிடம் முழுவதும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வியட்நாம் தீ விபத்து
வியட்நாம் தீ விபத்து

மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கட்டிடம் குறுகிய சந்திற்குள் இருந்ததால் குடியிருப்புவாசிகளை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் தீ தடுப்புக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளாததால், அந்த கட்டிட உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in