ரூ.14,000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.... அதிரடி காட்டும் புது மாடல் ஒப்போ!

ஓப்போ ஏ78
ஓப்போ ஏ78

அதிரவைக்கும் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் விலையில், ஓப்போ ஏ78 (OPPO A78) போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஓப்போ ஏ78
ஓப்போ ஏ78

ஓப்போ ஏ78 போனில், 6.43 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) வருகிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இடம் பெற்றுள்ளது. 50 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் இடம்பெற்றிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது.

கம்மியான விலையில், 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட்டும் உள்ளதால், வாடிக்கையாளர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த போன், அக்வா கிரீன் (Aqua Green) மற்றும் மிஸ்ட் பிளாக் (Mist Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.17,499ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, ரூ.15,499ஆக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் கூடுதல் சலுகையாக, ஓப்போ ஏ78 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1,499 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.14,000 பட்ஜெட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in