கட்டிடங்கள் மீது மோதிய போர் விமானம்... பறிபோன உயிர்: பற்றி எரிந்த வீடுகளிலிருந்து ஓடிய மக்கள்

கட்டிடங்கள் மீது மோதிய போர் விமானம்... பறிபோன உயிர்: பற்றி எரிந்த வீடுகளிலிருந்து ஓடிய மக்கள்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்தின் போர் விமானம், கட்டிடங்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அடுத்தடுத்த வீடுகளில் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சீன விமானப்படையின் புதிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது, ஜியாங்யாங்கில் உள்ள லாஹேகவ் விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஜே-7 போர் விமானத்தில் பயணித்த ஒரு விமானி மற்றும் கட்டிடத்தில் இருந்த இரண்டு பேர் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக இணையத்தில் வைரலாக பரவும் வீடியோக்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும், பல வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும் சீன அரசின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் மற்றும் மேலும் உயிரிழப்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால மீட்புப்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in