அமெரிக்கப் போர் பயிற்சிக்கு பதிலடி: 35 நிமிடங்களில் 8 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வட கொரியா 35 நிமிடங்களுக்குள் அதன் கிழக்கு கடற்கரையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகத் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

குறைந்த தூரம் சென்று தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து கிழக்கு ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்தச் செயல் ஜப்பானை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. தங்கள் கடல் பகுதிகளில் வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஜப்பானியப் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் அமெரிக்கா-தென்கொரிய ராணுவத்தினர் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா நடத்தும் 18-வது ஏவுகணை சோதனை இதுவாகும். கடந்த மாதமும், மூன்று ஏவுகணைகளை ஏவி அந்நாடு சோதனை செய்தது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹ்வாசாங்-17 எனும் மிகப்பெரிய ஏவுகணையும் அடக்கம்.

முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு தென் கொரியா வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதிதாகப் பதவியேற்றுள்ள தென் கொரிய அதிபர் யூன் சியோக் யூலைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in