ஒருவருக்குதான் கரோனா: நாடு முழுவதும் ஊரடங்கு போட்ட அதிபர்

ஒருவருக்குதான் கரோனா: நாடு முழுவதும் ஊரடங்கு போட்ட அதிபர்

முதல்முறையாக ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.

கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தையே அச்சுறுத்தி வந்தது கரோனா வைரஸ். ஆனால், வடகொரியாவில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், வட கொரியாவில் முதல் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, அதில் ஒருவர் ஓமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பாதிப்பு மேலும் அதிகமாகுமா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. ஆனால் வடகொரியாவின் ஏற்கெனவே சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in