புதிதாக 2 ஏவுகணை சோதனைகளை நிகழ்த்திய வடகொரியா... அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலி!

ஏவுகணை சோதனை
ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரிய இராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

இந்த நிலையில் வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதன்படி வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில், 'ஹவாசால்-1 ரா-3' என்ற சக்திவாய்ந்த ஏவுகணையையும், விமானத்தை தாக்கி அழிக்கும் 'பியோல்ஜி-1-2' என்ற ஏவுகணையையும் நேற்றைய தினம் வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

ஏவுகணை
ஏவுகணை

இதுகுறித்து விளக்கமளித்த வடகொரிய அரசின் செய்தி நிறுவனம், ‘வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப போர்க்கருவிகளில் தொழில்நுட்பங்களை புகுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த இரு சோதனைகளும் நிகழ்த்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. எச்சரிக்கைகளையும் மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், அமெரிக்கா மற்றும் தென்கொரியா கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in