புதிய ‘நியோகோவ் வைரஸ்’ கொடிய தன்மை கொண்டதாம்!

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதேநாட்டில் ‘மெர்ஸ் கோவ்’ என்ற ‘நியோகோவ் வைரஸ்’ கண்டறியப்பட்டுள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்து மக்களை கொன்றுகுவித்தது. இதன் வீரியம் கடந்த ஆண்டு குறைந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் கரோனா வைரஸ் ஒமைக்ரானாக உருவெடுத்தது. இந்த வைரஸ் வேகமாக பரவினாலும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்பது சற்று ஆறுதல் விஷயம்.

கரோனா வைரஸ் தொற்று அடுத்தடுத்த உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் நிலையில், இன்னும் உலக நாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், கரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. இந்த நிலையில், உலக அளவில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது.

கரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்
கரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்hindu கோப்பு படம்

கரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் மெர்ஸ் கோவ் என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ், 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வெளவாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம்" எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான், அதன் பாதிப்பு குறித்து தெரியவரும். இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in