புதிய வகை கரோனா வைரஸ்!

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
புதிய வகை  கரோனா வைரஸ்!

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள் அச்சுறுத்தலாகவே உள்ளன. இந்நிலையில், புதிய வகை கரோனா வைரஸ், பரவத் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர், இரண்டு வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், அவை, புதிய வகை வைரஸ் உருவாக வழிவகுக்கின்றன. இதன்படி ஒமைக்ரான் வைரஸின் பிரிவுகளான பி.ஏ. 1 மற்றும் பி.ஏ. 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ என்ற மரபணு மாறிய புதிய வகை வைரஸை உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸால், பிரிட்டனில் ஜனவரி 19- ம் தேதி முதல் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 600-க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in