இலங்கையின் புதிய பிரதமர் பதவியேற்பு: யார் இந்த தினேஷ் குணவர்தன?

இலங்கையின் புதிய பிரதமர் பதவியேற்பு: யார் இந்த தினேஷ் குணவர்தன?

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன கடந்த 1983-ம் ஆண்டு முதன்முறையாக எம்.பியாக தேர்வானார். 2000ம் முதல் தொடர்ச்சியாக எம்.பியாக இருந்துவரும் 73 வயதான தினேஷ் குணவர்தன, 2000ம் ஆண்டு முதல் பல முக்கியத் துறைகளின் அமைச்சராகவும் இவர் இருந்துள்ளார். இவர் மஹாஜன ஏக்சாத் பெரமுனா கட்சியின் தலைவராகவும் உள்ளார். கடைசியாக இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையிலும் இவர் அமைச்சராக இருந்தார்.

இலங்கையின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, இன்று தினேஷ் குணவர்தனவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

முன்னதாக, கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்த கிளர்ச்சிகளால், கோத்தபய ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற பின்னர் தனது அதிபர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 134 பேரின் ஆதரவைப் பெற்று ரணில் வெற்றி பெற்றார். இவருக்கு ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சி முழு ஆதரவை அளித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட டளஸ் அலஹப்பெருமா 82 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். ரணில் அதிபரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களிலும் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in