100ல் 14 பேர் உயிரிழப்பு... உலகை அச்சுறுத்தும் எரிஸ்! இந்தியாவிலும் கண்டறியப்பட்ட அதிர்ச்சி!

எரிஸ் வைரஸ்
எரிஸ் வைரஸ்

பிரிட்டனில் வேகமாக பரவி அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ், இந்தியாவில் கடந்த மே மாதம் கண்டறியப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனில் கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அறிவியல் ரீதியாக EG. 5.1 என மருத்துவ வல்லுநர்கள் அழைக்கின்றனர். ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை வைரஸ் தாக்குதல் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதே போல், இந்த வைரஸ் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் 100 பேரில், 14 பேர் உயிரிழப்புக்குள்ளாவதாக அதிர்ச்சியான தகவலும் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in