மெக்சிகோ சூறாவளி... பலியானோர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100 ஆனது!

புரட்டிப்போட்ட சூறாவளி
புரட்டிப்போட்ட சூறாவளி

கடந்த வாரம் மெக்சிகோவில் தாக்கிய சூறாவளியால் ஏராளமான உடைமைகள் மற்றும் பொருள் இழப்பு நேர்ந்ததோடு, பலியானவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரை கடந்த வாரம் சூறாவளி ‘ஓடிஸ்’ தாக்கியது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைத்ததோடு, ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போனார்கள். இவ்வாறு சூறாவளி காரணமாக இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று குரேரோ மாகாண அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

சூறாவளியால் தெருவுக்கு வந்த மக்கள்
சூறாவளியால் தெருவுக்கு வந்த மக்கள்

கடந்த வாரம் புதனன்று மணிக்கு 266 கிமீ வேகத்தில் அகாபுல்கோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளியால், நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது; வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிலையங்களின் கூரைகள் கிழித்தெறியப்பட்டன. வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்டதோடு, சாலை மற்றும் ஆகாய மார்க்கத்திலான பயணங்களும் வெகுவாய் துண்டிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானார்கள்.

இயற்கையால் விளைந்த ஓடிஸ் சூறாவளியின் பாதிப்பு மட்டுமன்றி, அரசின் பேரிடர் உதவிகள் முறையாக கிடைக்காததில் செயற்கையான பேரிடருக்கும் மக்கள் ஆளானார்கள். அடிப்படைத் தேவையான உணவு மற்றும் குடிநீர் கூட கிடைக்காது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

கடைகளை சூறையாடும் மெக்சிகோ மக்கள்
கடைகளை சூறையாடும் மெக்சிகோ மக்கள்

இதனால் பொறுமையிழந்த மக்கள் கடைகளில் புகுந்து கிடைத்த உணவுப் பொருட்களை சூறையாடும் அளவுக்கு மோசமானார்கள். சூறாவளியின் பாதிப்பு கடைகள் சூறையாடல் வரை எதிரொலித்த பிறகே, அரசின் மெத்தனத்துக்கு மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரே மேனுவல் வருத்தம் தெரிவித்தார். மேலும் மக்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். சூறாவளியின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மெக்சிகோ படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in