கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமரின் நவராத்திரி வாழ்த்து... இந்தியாவுடனான இறுக்கம் தணிக்குமா?

கனடா - இந்தியா இடையே வளர்ந்து வரும் இறுக்கம், தற்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நவராத்திரி வாழ்த்துகளால் தணியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புலம்பெயர்ந்த சீக்கியர்கள் பங்கெடுத்திருக்கும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவோடு கனடாவில் ஆட்சி செய்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த வகையில் சீக்கியரின் காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தினருக்கு புகலிடமாக கனடா மாறி வருகிறது. அவர்களின் கருத்துக்களையும் கனடா அரசின் கருத்தாக எதிரொலித்ததில், இந்தியாவையும் அதன் இறையாண்மையையும் ஜஸ்டின் ட்ரூடோ சீண்டத் தொடங்கினார்.

ஜூன் 18 அன்று கனடா வாழ் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர், அங்குள்ள குருத்வாரா ஒன்றின் முன்பாக மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் உளவு ஏஜெண்டுகள் இருப்பதாக கனடா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஜஸ்டின். இதனையடுத்து இரு நாடுகள் இடையே உரசல் அதிகரித்தது. பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இந்த பதற்றநிலை மேலும் அதிகரித்தது.

ஜஸ்டினின் நவராத்திரி வாழ்த்து
ஜஸ்டினின் நவராத்திரி வாழ்த்து

இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், கனடாவுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததிலும் ஜஸ்டின் ட்ரூடோ சுருதி குறைந்தார். இந்திய எதிர்ப்பு நிலையை பிற்பாடு குறைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அவர் தெரிவித்த வாழ்த்து செய்தி இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது. தீபாவளி உள்ளிட்ட இந்து மதப் பண்டிகைகளை குடும்பத்தோடு கொண்டாடும் வழக்கம் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, நவராத்திரிக்கு வாழ்த்து தெரிவித்ததில் ஆச்சரிமில்லை. எனினும், இந்தியா - கனடா இடையே நிலவி வந்த இறுக்கத்தை சற்றே போக்கும் வகையில், கனடா பிரதமரின் தற்போது வாழ்த்துக்கு வரவேற்பு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in