`நேட்டோ களமிறங்கினால் 3வது உலகப்போருக்கு வழிவகுக்கும்'

எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
`நேட்டோ களமிறங்கினால் 3வது உலகப்போருக்கு வழிவகுக்கும்'

"ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் நேட்டோ படைகள் தலையிட்டால் அது 3வது உலக போருக்கு வழி வகுத்துவிடும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை தன் வசம் ஆக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் கொத்துக் கொத்தான கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதனிடையே, ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரை நேட்டோ அமைப்பு நேரடியாக போரில் ஈடுபடவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ படைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரே நேரடி போர் ஏற்பட்டால் அது 3வது போருக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும் என்றும் 3வது உலக போர் போன்ற அபாயகரமான சூழலை தவிர்க்கவே நேட்டோ விரும்புவதாகவும் அடைக்கலம் தேடி அமெரிக்கா வரும் உக்ரைன் குடிமக்களை திறந்த மனதுடன் வரவேற்பதாகவும் நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒவ்வொரு அங்குலத்தை இரும்புகரம் கொண்டு பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in