வால்மார்ட் வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவை அதிரவைத்த அடுத்த விபரீதம்

வால்மார்ட் வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவை அதிரவைத்த அடுத்த விபரீதம்

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் உள்ள செஸ்பீக் நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில், நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏறத்தாழ 10 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

இரவு 10.12 மணி அளவில், வால்மார்ட் வளாகத்தின் சாம் சர்க்கிள் எனும் பகுதியில் ஒருவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டுப் பலரைக் கொன்றார். பின்னர் அவரும் துப்பாகிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். எனினும், அவரை போலீஸார் சுடவில்லை என்றும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு அவர் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in