இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்தது மராபி எரிமலை

மராபி எரிமலை வெடிப்பு
மராபி எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மராபி எரிமலை இன்று மீண்டும் வெடிப்பு கண்டுள்ளது.

டிசம்பரில் வெடிப்பு கண்ட மராபி எரிமலை மீண்டும் இன்று வெடித்துச் சிதறியது. பெருமளவு சாம்பலையும், வெளியேறாத நெருப்புக் குழம்பையும் எரிமலை கக்கியதை அடுத்து, அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மராபி எரிமலை கக்கிய சாம்பல்
மராபி எரிமலை கக்கிய சாம்பல்

இன்று காலை நேரிட்ட வெடிப்பினை அடுத்து எரிமலையிலிருந்து, சுமார் 1,300 மீட்டருக்கு சாம்பல் பரவியது. மார்பி சிகரத்தின் அருகே கிராமங்களில் வசிப்போர், எரிமலை வெடிப்பு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து அறிந்திருந்தபோதும், அரசு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். திசையெங்கும் பரவிய சாம்பல் காரணமாக சுவாசப் பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளானார்கள்.

எரிமலையின் அடுத்த வெடிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்ததால், கடந்த சில தினங்களாகவே அதிகாரிகள் அங்கே முகாமிட்டு ஆராய்ந்து வந்தனர். மலையேற்றக் குழுவினர், உறங்கும் எரிமலையை காணவிரும்பிய சாகசப் பயணிகள் என எவரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் எரிமலை வெடிப்புக்கான இரண்டாவது உயர் எச்சரிக்கை நேற்று மாலை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் எதிர்வினையாக, எரிமலையை ஒட்டி சுமார் 4.5 கிமீ சுற்றளவுக்கு காலி செய்யப்பட வேண்டும்.

கால்நடைகளை கண்காணிக்க இடையே அனுமதிக்கப்பட்ட சிலர் தவிர்த்து, எரிமலையின் சுற்றுவட்டார கிராமங்கள் காலி செய்யப்பட்டன. இதே மராபி எரிமலை கடந்த மாதம் வெடித்தபோது ஏற்பட்ட படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றதிலும், அரசு விரைந்து செயல்பட்டது. டிசம்பர் வெடிப்பின்போது சுற்றுலா பயணிகளில் 23 பேர் எரிமலை அருகிலேயே இறந்தனர். படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சுமத்ரா தீவின் மிகவும் ஆக்டிவான எரிமலை மட்டுமன்றி, இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் விழித்திருக்கும் 130 எரிமலைகளில் ஒன்று என்ற வகையிலும் மராபி கவனம் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in