`போர்க்களத்தில் எனது உயிரை செல்போன் காத்தது'- உக்ரைன் வீரர் உருக்கம் (வீடியோ)

`போர்க்களத்தில் எனது உயிரை செல்போன் காத்தது'- உக்ரைன் வீரர் உருக்கம் (வீடியோ)

போர்க்களத்தில் ரஷ்ய படைகள் நடத்தி தாக்குதலில் செல்போன் எனது உயிரை காப்பாற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவ வீரர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இரண்டு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி செய்தும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. அப்படி இருந்தும் அதிபர் புதின், உக்ரைன் மீது ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறார். உக்ரைனில் உள்ள பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், மேலும் பல பகுதியை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், போர்க்களத்தில் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை செல்போன் காப்பாற்றியுள்ளது. செல்போன் மூலம் தான் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது கால் சட்டையில் இருந்த செல்போனை எடுத்துக் காட்டிய அவர், ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் இருந்து செல்போன் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளார். சுமார் 7.62 மில்லி மீட்டர் அளவு கொண்ட தோட்டா, செல்போனின் வெளிப்புற கவரை கிழித்து அதன் இடுக்கில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், தோட்டா தாக்காமல் அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.