மணவாழ்க்கையில் இணைந்த ‘அழகிகள்’!

மணவாழ்க்கையில் இணைந்த ‘அழகிகள்’!

முன்னாள் மிஸ் பியெர்ட்டோ ரிக்கோவான ஃபேபியோலா வாலென்டின், முன்னாள் மிஸ் அர்ஜென்டினாவான மரியானா வரேலா ஆகிய இரு அழகிகளும் காதல் திருமணம் செய்துகொண்டதாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிட்டிருக்கின்றனர். இதையடுத்து இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

கரீபியத் தீவுகளில் ஒன்றான பியெர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஃபேபியோலா வாலென்டின், 2019-ல் நடந்த பியெர்ட்டோ ரிக்கோ அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்பாகத் தேர்வுசெய்யப்பட்டவர். இவரும், முன்னாள் மிஸ் அர்ஜென்டினாவான மரியானா வரேலாவும் 2020-ல் தாய்லாந்தில் நடந்த மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியில் கலந்துகொண்டபோது சந்தித்து தோழிகளானார்கள். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினர்.

தங்கள் காதல் குறித்து பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத இருவரும், சமீபத்தில் இன்ஸ்டா ரீல்ஸில் அது குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிட்டனர். கூடவே தங்களுக்குத் திருமணமாகிவிட்ட தகவலையும் அதில் பதிவுசெய்திருக்கின்றனர். அக்டோபர் 28-ல் பியெர்ட்டோ ரிக்கோவில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

அர்ஜென்டினாவில் தன்பாலீர்ப்பாளர்களின் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்கும் பியெர்ட்டோ ரிக்கோவில், 2015 முதல் தன்பாலீர்ப்பாளர்களின் திருமணம், உச்ச நீதிமன்றத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in