அசத்தல் வீடியோ... நீருக்கடியில் மூன்வாக்...மைக்கேல் ஜாக்சனை நினைவூட்டிய பெண் நடனக் கலைஞர்!

நீருக்குள் மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடிய  ஃப்ரீடிவர் கிறிஸ்டினா
நீருக்குள் மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடிய ஃப்ரீடிவர் கிறிஸ்டினா

நடனப்புயல் மைக்கேல் ஜாக்சனின் ஐகானிக்கான மூன்வாக்கை நீருக்கடியில் சர்வ சாதாரணமாக ஆடி அனைவரையும் ஒரு பெண் நடனக்கலைஞர் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஃப்ரீடிவர் கிறிஸ்டினா
ஃப்ரீடிவர் கிறிஸ்டினா

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமியைச் சேர்ந்தவர் ஃப்ரீடிவர் கிறிஸ்டினா மகுஷென்கோ. பிரபலமான நடனக்கலைஞரான இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞரான மைக்கேல் ஜாக்சனின் ஐகானிக் ஸ்டெப் எனச் சொல்லப்படுகிற மூன்வாக்கை நீருக்கடியில் சர்வ சாதாரணமாக கிறிஸ்டினா ஆடி அசத்தியுள்ளார். சுழன்று சுழன்று அவர் நீருக்குள் ஆடும் நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அத்துடன் நீரில் தலைகீழாக ஆடுவதுடன் மீனைப் போல சுழன்றடிக்கிறார்.

இதுகுறித்து கிறிஸ்டினா, " இது நான் செய்த கடினமான ரீல்களில் ஒன்று. ஆனால், நான் நிஜமாகவே மூன்வாக்கின் பார்வையை மாற்ற விரும்பினேன்" என்று தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு 80,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். நீருக்கடியில் அதிர்ச்சியூட்டும் நடன நிகழ்ச்சியைப் பாராட்டி பலர் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in