அடடே... ரூ.258 கோடிக்கு வீடா? பிரம்மாண்ட டீலை இறுதி செய்த மார்க்!

பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தங்களது வீட்டை 31 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் உலகின் மிகவும் விலை உயர்ந்த செலவீனங்கள் கொண்ட நகரமாக இருந்து வருகிறது. இங்கு வீடு, நிலம் ஆகியவற்றை வாங்குவதற்கு பல மில்லியன் டாலர்களை அமெரிக்கர்கள் செலவழிக்க வேண்டி இருக்கும்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வீடு ஒன்றை வாங்கி இருந்தனர்.

1928ம் ஆண்டு கட்டப்பட்ட 7,386 சதுர அடி பரப்பளவு உள்ள அந்த வீட்டில், 4 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள் உட்பட பல்வேறு வசதிகள் இருந்தது. மிகவும் விலை உயர்ந்த வீடாக அப்போது அது கருதப்பட்ட நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வீட்டை விற்பனை செய்ய ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா ஆகியோர் முடிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த ஜூலை ஒன்றாம் தேதியுடன் முடிவடையும் வகையில் வீடு விற்பனைக்கான அறிவிப்பை இருவரும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த வீடு 31 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கலிபோர்னியாவை சேர்ந்த இட விற்பனை நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இது 258 கோடி ரூபாய் ஆகும்.

பல வீடுகளை வாங்கி குவித்து வரும் ஜூக்கர்பெர்க், சான் தம்பதிகள், கடந்த மார்ச் மாதம் ஹவாய் தீவுகளில் உள்ள கயூவா தீவில், 53 மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் 600 ஏக்கர் நிலங்களை வாங்கி இருந்தனர். இதன் மூலம் ஹவாயில் சுமார் 1,300 ஏக்கர் நிலங்களை அவர்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in