மலேசியாவின் புதிய பிரதமரை அறிவித்தார் மன்னர்!

மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்கும் அன்வர் இப்ராஹிம்
மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்கும் அன்வர் இப்ராஹிம்

இழுபறியாக இருந்த மலேசிய பிரதமர் தேர்வில், மன்னர் சுல்தான் அகமது ஷா ஒரு முடிவை எட்டியுள்ளார். அதன்படி எதிர்க்கட்சி வரிசையிலிருந்து அன்வர் இப்ராஹிமை மலேசிய பிரதமராக இன்று( நவ.24) அறிவித்தார்.

மலேசியா நாட்டின் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 15வது பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக அன்வர் இப்ராஹிமின் கட்சிக்கு 82 இடங்கள் கிடைத்திருந்தன. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினின் தேசிய கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைத்திருந்தன. சிறிய கட்சிகளில் ஒன்றான மலேசியன் இஸ்லாமிக் கட்சி 49 இடங்களை பெற்றிருந்தது. ஆட்சியமைக்க 112 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டாது இழுபறியானது.

மலேசிய அரசியலில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் பொறுப்பு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா வசம் சென்றது. சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து அன்வர் இப்ராஹிம் ஆட்சியமைக்க முன்வந்தார். இதனையடுத்து மலேசியானின் அடுத்த பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அறிவித்துள்ளார். இன்று நடக்கும் அரசு விழாவில் அன்வர் இப்ராஹிமை புதிய பிரதமராக மன்னர் சுல்தான் அஹமது ஷா நியமிக்க உள்ளார்.

புதிய அரசு தொங்கு பாராளுமன்ற அபாயத்துக்கு ஆளாகி உள்ளபோதும், சீர்திருத்தவாதியான அன்வர் இப்ராஹிமின் வரவு மலேசியாவில் எதிர்பார்ப்புகளை வித்திட்டிருக்கிறது. பல்வேறு மதங்கள், இனத்தவர் வசிக்கும் மலேசிய தேசம், வலது சாரியான முகைதீன் யாசின் பிடியிலிருந்து விடுபட்டிருப்பதையும் சாதக அம்சமாக குறிப்பிடுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in