‘நாட்டை விட்டு வெளியேறக்கூடாது': மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் அதிரடி!

‘நாட்டை விட்டு வெளியேறக்கூடாது': மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் அதிரடி!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்பட 17 பேர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மே 9-ம் தேதி போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள், கொழும்புவில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இதனால் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரக்காரர்களைக் கண்டதும் சுட முப்படையினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் குறையத்தொடங்கின.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக திரிகோணமலையில் உள்ள காட்டு பங்களாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இநத் நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடும் என்ற செய்திகளும் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இது இலங்கை மக்கள் மத்தியில் கோபத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் கொழும்பு நீதிமன்றம், மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான நமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது. அத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.