இன்று முதல் ‘லைரிட்’ எரிகல் பொழிவு: எந்த நேரத்தில், எங்கிருந்து பார்க்கலாம்?

இன்று முதல் ‘லைரிட்’ எரிகல் பொழிவு: எந்த நேரத்தில், எங்கிருந்து பார்க்கலாம்?
மாதிரிப் படம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வானில் நிகழும் அற்புதம் லைரிட் எரிகல் பொழிவு. கடந்த 2,700 ஆண்டுகளாக, இந்நிகழ்வு உலகின் பல பாகங்களில் தென்படுவருகிறது என நாசா கூறியிருக்கிறது. இரவில் இந்த எரிகற்கள் விழும்போது ஒளிரும் தூசிப் பாதைகள் மற்றும் கோடுகள் வானத்தில் தென்படும். இந்த எரிகற்கள், தாட்சர் (சி/1861 ஜி1) வால் நட்சத்திரத்தின் எனும் வால்நட்சத்திரத்தின் குப்பைத் துகள்களைச் சேர்ந்தவை.

இந்த வால்நட்சத்திரம் சூரியக் குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் சென்றுகொண்டிருக்கிறது. இது மீண்டும் தனது பாதைக்கு 45 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட நேரம் தென்படும் வால்நட்சத்திரமான தாட்சர், சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 415 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (ஏப்.22) முதல் அடுத்த வெள்ளிக்கிழமை (ஏப்.29) வரை லைரிட் எரிகல் பொழிவு நிகழ்வை டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பார்க்க முடியும். இன்று இரவு 8.31 மணி முதல் இந்நிகழ்வைப் பார்க்க முடியும். அதேசமயம், நிலவின் வெளிச்சம் காரணமாக இந்நிகழ்வு அவ்வளவு தெளிவாக நமது கண்களுக்குப் புலப்படாது என வானியலாளர்கள் கூறுகிறார்கள். அதிகாலையில் நிலவு மறைந்து சூரியன் உதிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்நிகழ்வு வானில் தெளிவாகத் தெரியும். அந்த நேரத்தில் இந்நிகழ்வைக் கண்டுகளிக்கலாம் என்கிறார்கள் வானியல் நிபுணர்கள்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 முதல் 15 எரிகற்கள் வரை விழும் என்றும், இந்த முறை எரிகல் விழும் காட்சி 20 முதல் 25 சதவீதம் வரை மங்கலாகத் தெரியும் என்றும் வானியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.