மண்ணோடு மண்ணான 697 பேரின் உயிர்... பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட  நிலச்சரிவில் நடக்கும் மீட்பு நடவடிக்கை
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நடக்கும் மீட்பு நடவடிக்கை
Updated on
1 min read

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 697 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில், ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. கடலைச் சுற்றி அமைந்துள்ள இந்த தீவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்குள்ள எங்கா மாகாணம், காகலம் மலைக்கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதில் 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட  நிலச்சரிவில் நடக்கும் மீட்பு நடவடிக்கை
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நடக்கும் மீட்பு நடவடிக்கை

அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டிருந்த சுமார் 3 மணியளவில் நிலச்சரிவு திடீரென ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் 6 கிராமங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும், மூன்று கிராமங்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 150 -க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவிற்குள் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால், தற்போது 697 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் தெரிவிக்கையில் , மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார். நிலச்சரிவில் சாலைகள் மூடப்பட்டதாகவும், இதனால் மீட்பு பணியானது கடினமானதாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதனால், பாதிப்புக்குள்ளான பகுதியில் வாகனம் செல்லாத முடியாத நிலை இருப்பதாகவும், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் நிலச்சரிவு பகுதிகளில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in