கண்ணாடி வீடு கூட ஓகே! டாய்லெட்டில் எப்படிப்பா? ட்விஸ்ட் வைத்த ஜப்பானியர்கள்

ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்
ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்

ஜப்பானில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் கண்ணாடிகளால் அமைக்கப்பட்ட கழிவறைகள், சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

நூடுல்ஸை ஆற வைக்க சிறிய அளவிலான ஃபேனில் துவங்கி, விண்வெளிக்கு பிரம்மாண்டமான ரோபோக்களை அனுப்புவது வரை ஜப்பானியர்களின் கண்டுபிடிப்புகள் எப்போதுமே உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பானில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கழிவறை ஒன்று பேசு பொருளாக மாறி இருக்கிறது.

பொதுவாக முன்னேறிய உலக நாடுகளை தவிர பல நாடுகளிலும் கழிவறை என்பது எல்லோருக்கும் எளிதாக வைத்து விடுவதில்லை. குறிப்பாக ஏழை நாடுகளில் மோசமான கழிவறைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்தியாவில் கூட பல இடங்களில் கழிவறைகள் இல்லாததால் பொது இடங்களை கழிவறைகளாக பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது.

ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்
ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்

இந்நிலையில் ஜப்பானில் புதிதாக கழிவறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடத்தில் கண்ணாடியிலான சுவர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகளை, வெளியில் இருந்து பார்த்தாலே அது சுத்தமாக உள்ளது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாம் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக உள்ளதா என்பதை உள்ளே சென்று பார்த்துவிட்டு பின்னர் மூக்கை பிடித்தபடி வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருப்பதால் அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வும் இதை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்
ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்

இருப்பினும் கண்ணாடியால் ஆன கழிப்பறை என்பதால் இதை எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் எழலாம். இதற்கு ஜப்பானியர்கள் பயன்படுத்தியுள்ள கண்ணாடியில் தான் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்பத்தில் இந்த கண்ணாடி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஒருவர் உள்ளே சென்று கதவை பூட்டியவுடன், தானாகவே இந்த கண்ணாடிகள் இருபுறமும் நிறம் மாறி மூடிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளியில் இருந்து பார்ப்பவருக்கு உள்ளே நடப்பது தெரியாது. உள்ளே இருப்பவருக்கு வெளியே நடப்பது தெரியாது. இதனால் ஒருவர் அச்சமின்றி இந்த கழிவறையை பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதவை திறக்கும் வரை இந்த நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்
ஜப்பானில் அமைக்கப்பட்டு கண்ணாடி சுவர் கொண்ட கழிவறைகள்

தற்போதைக்கு சில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ள இந்த கழிவறைகளை, பிற இடங்களிலும் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவறைகள் நம் நாட்டிற்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு செல்லும்போது இதை பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே!

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in