ஜப்பான் மேலவைத் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஸோ அபேவின் கட்சி அமோக வெற்றி!

ஜப்பான் மேலவைத் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஸோ அபேவின் கட்சி அமோக வெற்றி!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், அபேவின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி - கொமீட்டோ கூட்டணி 76 இடங்களைப் பெற்று மேல்சபைத் தேர்தலில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டது.

மேற்கு ஜப்பானில் உள்ள நரா நகரில் ஷின்ஸோ அபே வெள்ளிக்கிழமை காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார். ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயம் ஏற்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தற்போது தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா மற்றும் பிற எல்டிபி கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு ஊடகங்கள் முன் தோன்றினர். அவர்கள் ஷின்ஸோ அபேவுக்கு துக்கம் தெரிவிக்கும் ரிப்பன்களுடன் கருப்பு டை மற்றும் ஆடைகளை அணிந்து ஒரு கணம் மௌனமாக இருந்தனர்.

ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களால் இளஞ்சிவப்பு பூக்களை வைத்தபோதும், அவரது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜப்பானிய பிரதமர், "வன்முறையானது நமது ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தல் செயல்முறையை அச்சுறுத்தியது. என்ன விலை கொடுத்தாலும் இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று கூறினார்.

தற்போதைய மேல்சபை தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளதால் ஃபுமியோ கிஷிடா மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சி பொறுப்பில் இருப்பார். இந்த ஆண்டு 52.05 சதவீத வாக்காளர்கள் மேல்சபைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர், இது 2019 மேல்சபைத் தேர்தலை விட அதிகமாகும், ஆனாலும் இது இரண்டாவது மிகக் குறைவான வாக்குப்பதிவு சதவீதமாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in