
காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் அல்ல என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரில் சென்று ஜோ பைடனை வரவேற்றார்.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது காசா பகுதியில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் டெல் அவிவ் நகரில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் ஜோ பைடன்.
அப்போது அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என கூறியதோடு காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் பாலஸ்தீனத்தால் ஏவப்பட்ட ஏவுகணையால் தான் தவறுதலாக நிகழ்ந்திருக்கக்கூடும் எனும் இஸ்ரேலின் கூற்றையே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் கொடூரமானது என்றும், ஐ.எஸ் அமைப்பை விட அவர்கள் கொடூரமானவர்கள் என்றும் ஜோ பைடன் குற்றம் சாட்டினார். மேலும் அவர், காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு மிகுந்த கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியாக தெரிவித்தார்.
உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ள காசா மருத்துவமனை மீதான தாக்குதல், 'நான் பார்த்ததன் அடிப்படையில், அந்த தாக்குதலை நடத்தியது நீங்கள் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. எனவே நாம் நிறைய விஷயங்களைக் கடந்து வர வேண்டும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் தாக்குதலின் போது 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், பலி எண்ணிக்கை அதிகமாவும் இருக்க வாய்ப்புள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர், இஸ்ரேலுக்கு ஆதரவும் தேவையான உதவிகளையும் வழங்கி வருவதற்காக பைடனுக்கு நன்றி கூறியதோடு, போரின் போது தங்களது நாட்டிற்கே வந்து ஆதரவு தெரிவித்த முதல் அமெரிக்க அதிபர் பைடன் தான் எனவும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!