எவ்வளவு லீவு வேணாலும் எடுத்துக்குங்கு... பணியை மட்டும் செஞ்சிடுங்க: ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்!

எவ்வளவு லீவு வேணாலும் எடுத்துக்குங்கு...  பணியை மட்டும் செஞ்சிடுங்க:  ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்!

நியூசிலாந்தை சேர்ந்த மென்பொருள்( ஐ.டி) நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வரம்பற்ற விடுமுறையை(Unlimited leaves) அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'ஆக்சன் ஸ்டெப்' என்ற ஐ.டி நிறுவனம் தான் தனது ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு விடுமுறையில் விதித்திருந்த கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வருடத்தில் ஊழியர்கள் விரும்பும் வரையில் விடுமுறையில் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது. " திரும்பி வந்து எங்களுக்காக சிறந்த முறையில் வேலை செய்யுங்கள்" என்று அந்த நிறுவனம் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்டீவ் கூறுகையில், " எங்கள் ஊழியர்களுக்கு வரம்பற்ற விடுமுறையை அளிக்க நாங்கள் முன் வந்துள்ளோம். அவர்களது உடல் நிலை, மகப்பேறு என அனைத்து விடுமுறைகளும் இதில் அடங்கும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். வாழ்க்கையும், வேலையையும் சரி விகிதத்தில் வைத்துக் கொள்ளும்போது, மிகச்சிறந்த பணி வெளிப்படும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.