ஹமாஸின் சுரங்கப் பாதைகளை தகர்க்கும் இஸ்ரேல் வீரர்கள்
ஹமாஸின் சுரங்கப் பாதைகளை தகர்க்கும் இஸ்ரேல் வீரர்கள்

காசா தெருக்களில் நேருக்கு நேர் மோதல் உக்கிரம்; அல்-கஸாம், இஸ்லாமிய ஜிகாத் இணைந்து தாக்குதல்

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேலிய தரைப்படையினர் மீது, ஹமாஸின் அல்-கஸாம் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆயுத குழுக்கள் இணைந்து தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளன.

காசாவை வடக்கு தெற்கு என பிரித்து முற்றுகையிட்ட இஸ்ரேலிய படை, வடக்கு காசாவில் பதுங்கியுள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து வேட்டையை தீவிரமாக்கியுள்ளது. வடக்கு காசாவில் தீவிர தாக்குதல் நடத்த வசதியாக அங்குள்ள மக்களை தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய படைகள் உத்தரவிட்டுள்ளன. இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகரின் மையத்தை எட்டியதில், காசா தெருக்களில் சண்டை மூண்டுள்ளது.

காசாவுக்குள் இஸ்ரேல் படைகள்
காசாவுக்குள் இஸ்ரேல் படைகள்

ஹமாஸின் ஆயுதக் குழுவான அல்-கஸாம் மற்றும் இன்னொரு பாலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிகாத் ஆகியோருடன் இஸ்ரேலிய படைகள் நேருக்கு நேர் மோதுகின்றன. குடியிருப்புகளில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்துக் கொல்வது, கெரில்லா தாக்குதல் நடத்தும் அவர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது, பிணைக்கைதிகளின் இருப்பிடத்தை கண்டறிவது, ஹமாஸ் அமைப்பினரின் பதுங்குமிடங்களை அழிப்பது என பல்வேறு சவால்களை இஸ்ரேலிய படைகள் எதிர்கொண்டு வருகின்றன.

நேரடி மோதலில் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்ற போதும், வேறு வழியின்றி காசா தெருக்களில் இஸ்ரேல் படைகள் முன்னேறி வருகின்றன. இந்த போர் நடவடிக்கையில் இதுவரை தங்கள் தரப்பில் 33 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. முன்னதாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து அக்.7 அன்று நடத்திய தாக்குதலில் 1400 உயிர்களை இஸ்ரேல் பறிகொடுத்திருந்தது.

காசாவில் இஸ்ரேல் படையினர்
காசாவில் இஸ்ரேல் படையினர்

காசாவில் இரண்டாவது மாதமாக தொடரும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்படி 10,569 பேர் காசாவில் பலியாகி உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள். காசா - இஸ்ரேல் என இருதரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஐநா குற்றம்சாட்டி உள்ளது. மேலும், காசா வாழ் குடிமக்கள் மத்தியில் உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு வழியின்றி, அங்கே தொற்று நோய் பரவம் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in