இன்றிரவு கடும் தாக்குதல்; எச்சரிக்கும் இஸ்ரேல்... அச்சத்தில் உலக நாடுகள்!

இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதல்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இன்று இரவு எங்களின் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் என்று  அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான தாக்குதல் மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7 ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. மேலும் பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.

இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் அங்குள்ள இலக்குகளைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. சில மணி நேரம் தாக்குதலை நடத்திவிட்டு, அவை மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவிட்டன. நேற்றிரவும்  தாக்குதலை நடத்தியது.

இதற்கிடையே இஸ்ரேலிய ராணுவம் காசாவில் அதன் தரை வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உள்ளதாக எச்சரித்துள்ளது. இப்போது காசா வடக்கு பகுதியில் நடத்தும் தாக்குதலை விட வரும் காலத்தில் பெரிய தாக்குதல்களை நடத்த உள்ளதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், "கடந்த சில நாட்களில் காசா பகுதியில் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். இவை இன்றிரவு தீவிரமாக்கப்படும்" என்று  தெரிவித்தார். 

இன்று இரவு முதல் காஸா தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் பாதிப்புகள் மேலும் மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in