‘எகிப்து, ஜோர்டான் நாடுகளில் இருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவும்’ இஸ்ரேல் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்
மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்

எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளில் இருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் நாடு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இஸ்ரேலுக்கு எதிரான அலை சுனாமியாக மாறி வருகிறது. இதன் போக்கில் அங்கு வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதியது. எனவே தனது குடிமக்களை குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்
மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடுத்தது மற்றும் குடிமக்களை கடத்திச் சென்றதை அடுத்து இஸ்ரேல் வெகுண்டெழுந்தது. ஹமாஸ் அமைப்பினர் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேலிய வான்படைகள், காசா மீது நடத்திய தாக்குதல் இதுவரை 4,100க்கும் மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் பலியானார்கள்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் தாக்குதலை உலக நாடுகள் இன அழிப்பு என வர்ணித்தன. குறிப்பாக பெருவாரியான இஸ்லாமிய தேசங்களை உள்ளடக்கிய மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு கடுமையான கண்டனம் எழுந்தது.

மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்
மத்திய கிழக்கில் காசா ஆதரவு - இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்

முதல் நடவடிக்கையாக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, துருக்கியிலிருந்து இஸ்ரேல் தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றது. அடுத்தபடியாக, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், அங்கிருக்கும் இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவும் இஸ்ரேல் அவசர எச்சரிக்கைகலை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்புணர்வு, இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களால் எழுந்துள்ள உயிரச்சம் ஆகியவை காரணமாக இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in