‘11,000 ஹமாஸ் இலக்குகளை தகர்த்துள்ளோம்’ அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் இஸ்ரேல் பெருமிதம்!

இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சில் காசா
இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சில் காசா

சுமார் 11,000 ஹமாஸ் இலக்குகள் இதுவரை குறிவைத்து தகர்த்துள்ளோம் என இஸ்ரேல் பெருமிதம் தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் இரண்டாம் கட்டத் தாக்குதலாக அதன் தரைவழி தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது. இந்த வகையிலான பெரும் தாக்குதல் நேற்று காசாவில் அரங்கேறியது. அகதிகள் முகாம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அங்கிருந்தவர்களில் 50க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேலானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தரப்பில் 11 வீரர்கள் பலியானார்கள்.

காசாவில் இஸ்ரேல் டாங்கிகள்
காசாவில் இஸ்ரேல் டாங்கிகள்

இஸ்ரேல் மீதான அக்.7 தாக்குதலின் மூளையான இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் கமாண்டரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இப்ராஹிம் கொல்லப்பட்டதை ஹமாஸ் மறுத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் புதிய பாய்ச்சல் எடுத்திருப்பதை நேற்றை தாக்குதல் ஒரு ஆரம்பமாக காட்டுகிறது.

அக்.7 அன்று தொடங்கிய இஸ்ரேல் - காசா மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் 8500க்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையில், இஸ்ரேல் படைகள் இதுவரை காசாவின் 11 ஆயிரம் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பலியானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு ஆயத்தமாக காசாவில் இணைய சேவை மற்றும் அலைபேசி சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அக்.7 தாக்குதலைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்வாறு தொலைத்தொடர்பு சேவை அங்கு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிம் கார்டுகள் பொருந்திய அலைபேசிகள் தவிர்த்து அனைத்தும் காசாவில் முடக்கப்பட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினரின் தகவல்தொடர்புகளை முடக்கி அவர்களை தனிமைப்படுத்தி, தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in