குழந்தைகளை கொல்வதை நிறுத்துங்கள் - இஸ்ரேலுக்கு கனடா வேண்டுகோள்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Updated on
2 min read

காசாவில் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் 40 நாட்களை கடந்துள்ளது. அதில், காசாவில் 11 ஆயிரம் பேர் உயிர் இழந்து உள்ளனர். 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பத்திரிகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்ரேல் அரசை வலியுறுத்துகிறேன்.

உலகம் உங்களை பார்த்து கொண்டு இருக்கிறது. டிவி, சமூகவலைதளம் வாயிலாக டாக்டர்கள், குடும்பத்தினர், உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் சாட்சியங்கள் வந்து சேர்கின்றன. பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் கொல்லப்படுவதை உலகம் பார்க்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

காசா உயிர்ப்பலிகள்
காசா உயிர்ப்பலிகள்

இதற்கு பதிலடி கொடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: பொது மக்களை குறிவைப்பதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகளை தான் குற்றம்சாட்ட வேண்டும். இஸ்ரேலை அல்ல. அக்., 7 ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து எம் மக்களை தலையைத் துண்டித்தும், எரித்தும் படுகொலை செய்தனர்.

யூத இன அழிப்புகளிலேயே அண்மைக்காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது.பொது மக்களை ஆபத்தில் இருந்து விலக்கி வைக்க எல்லா நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்கிறது.ஆனால், ஹமாஸ் அப்பாவிப் பொது மக்களை ஆபத்தின் வழியில் நிறுத்துகிறது. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், துப்பாக்கி முனையில் அவர்களை ஹமாஸ் அமைப்பினர் தடுக்கின்றனர்.பொது மக்கள் பின்னால் மறைந்து கொண்டு, பொது மக்களையே தாக்கும் இரட்டை போர்க்குற்றங்களில் ஈடுபடும் ஹமாசை தான் பொறுப்பாக்க வேண்டும். இஸ்ரேலை அல்ல.

இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர்

இந்தச்சூழலில் பண்பட்ட நாடுகள் ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை தோற்கடிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு நெதன்யாகு கூறினார்.கனடா பிரதமர் போல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கருத்துக்கூறியிருந்தார். அதற்கும் நெதன்யாகு பதிலடி கொடுத்து இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in